Sunday, May 17, 2020

ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகள்

சகல அங்கிகளையும் அவற்றின் போசனை தொடர்பான அறிவைப் பயன்படுத்தி பின்வருமாறு வகைப்படுத்தலாம்


1. தற்போசனிகள் :- தமக்குத்தேவையான உணவை தாமே உற்பத்தி 

    செய்து கொள்பவை ஆகும்.

    Eg:- பச்சைத் தாவரங்கள்

2. பிறபோசனிகள் :- உணவுக்காக வேறு அங்கிகளின் மீது
    தங்கியுள்ளவை ஆகும்.
    Eg:- விலங்குகள்

ஒளித்தொகுப்பு (Photosynthesis)


பச்சையத்தைக் கொண்ட தாவரங்கள் ஒளி உள்ளபோது நீர், காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதன உணவைத்தொகுக்கும் அனுசேபச் செயன்முறை ஒளித்தொகுப்பு எனப்படும்.

ஒளித்தொகுப்பின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

இவை இரு வகைப்படும்
  1. அகக் காரணிகள்
  2. புறக்காரணிகள்

ஒளித்தொகுப்புக்கு அவசியமான அகக் காரணிகள்
  1. பச்சையவுருமணியில் உள்ள குளோரோபில்

ஒளித்தொகுப்புக்கு அவசியமான புறக்காரணிகள்
  1. சூரியஒளி
  2. நீர்
  3. காபனீரொட்சைட்டு

ஒளித்தொகுப்பின் விளைபொருட்கள்
  1. ஒட்சிசன்
  2. குளுக்கோசு

No comments:

Post a Comment